இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோபாலசமுத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் கிராம உதயம், நாகர்கோவில் பெஜன்சிங் கண் மருத்துவமனை, நெல்லை ஜே.சி.ஐ. கிளாசிக், அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை, அன்னை வேளாங்கண்ணி ரத்த வங்கி, கடையநல்லூர் ஏ.டி.எம்.ஆர்.ஐ. அறக்கட்டளை சார்பில், கோபாலசமுத்திரம் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம், ரத்த தான முகாம் நடைபெற்றது. முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். கோபாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் தமயந்தி, துணைத் தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார்.

கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், கிராம உதயம் தலைமை கணக்காளர் சுமிதா ஆகியோர் பேசினர். டாக்டர் ஏசுபிரியா தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பெஜன்சிங் கண் மருத்துவமனையினர் கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அன்னை வேளாங்கண்ணி ரத்த வங்கி சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமில் 15 பேர் இரத்த தானம் வழங்கினர். மருத்துவ முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்தனர். அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


Next Story