இலவச மருத்துவ முகாம்
கோபாலசமுத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேரன்மாதேவி:
நெல்லை காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து, கோபாலசமுத்திரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின. முகாமை முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி தொடங்கி வைத்தார். கோபாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் தமயந்தி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார்.
கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் ஜெபமணி, ஆரோக்கிய மிக்கேல் ஜீவா ஆகியோர் கருத்துரையாற்றினர். கிராம உதயம் மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் நன்றி கூறினார். காவேரி மருத்துவமனை மருத்துவர் வேலுகந்தபெருமாள் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் தேவைப்பட்டோருக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.