ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (டெட்) ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (டெட்) ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுகளான (டெட்) தாள்-1 மற்றும் தாள்-2 டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) மற்றும் பட்டயப்படிப்பு (D.TEd) முடித்தவர்களுக்கு இந்த இரு தேர்வுகளுக்கும் ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக அறிமுக வகுப்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மயில்கேட் அருகே உள்ள படிப்பு வட்டத்தில் நடைபெற உள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். வாராந்திர மாதிரி தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஆர்வம் உள்ளவர்கள் இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவுசெய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள Google Form-ஐ பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

டெலிகிராம் மூலமாகவோ, studycirclesvg@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவுசெய்து பயன்பெறலாம்.

இ்வ்வாறு அவர் கூறினார்.


Next Story