நிதிநிறுவன அதிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி


நிதிநிறுவன அதிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 9 Oct 2023 7:30 PM GMT (Updated: 9 Oct 2023 7:30 PM GMT)

கோவையில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

பீளமேடு

கோவையில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிதி நிறுவன அதிபர்

கோவை சிங்காநல்லூர் தசமி பார்க் ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் அருண் தீபக் (வயது 42). இவர் பீளமேடு நாராயணசாமி லே அவுட் பகுதியில் தனியார் நிதிநிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டில் துபாய் சென்றார்.

அப்போது அவருடைய நண்பர் தினேஷ்குமார் மூலம் சென்னையை சேர்ந்த சுஜித், கருணாகரன் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். தொழில் தொடங்க தங்களுக்கு பணம் தேவை என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப கொடுத்து விடுவதாகவும் கூறினார்கள்.

கடன் வாங்கினர்

இதையடுத்து அவர் கோவை வந்ததும், அவர்களும் கோவை வந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கிச்சென்றனர். பின்னர் ரூ.5 லட்சத்தை திரும்ப செலுத்தினார்கள். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து பணத்தைகேட்டபோது அந்த பணத்துக்கான காசோலையை கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் போதிய அளவுக்கு பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனால் அருண் தீபக் பலமுறை சுஜித், கருணாகரன் ஆகியோரை தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது கொடுக்கவில்லை. பலமுறை கேட்டதற்கும் எந்த பதிலும் இல்லை. பின்னர் சிறிய தொகையை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ரூ.16½ லட்சம் மோசடி

ஆனால் கடைசி வரை ரூ.16½ லட்சத்தை திரும்ப கொடுக்கவில்லை. இது குறித்து அருண் தீபக் பீளமேடு போலீசில் புகார்அளித்தார். அதன்பேரில் போலீசார் சுஜித், கருணாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story