பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதன முறையில் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி


பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதன முறையில் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
x

பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதன முறையில் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்தவர் அமர்த்தீப் (வயது 31). இவர் கடந்த மாதம் சமூகவலைத்தளத்தில் பகுதி நேர வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது அதிலிருந்து ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டு இருந்த செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு நாளைக்கு ரூ.2700 முதல் ரூ.3 ஆயிரம் வரை சம்பளம் தருவதாக கூறியுள்ளார். அதற்கு அமர்த்தீப் சம்மதித்தாராம்.

இதன்பின்னர் அவர் அமர்தீப்பின் வங்கி கணக்கிற்கு முதல் தவணையாக ரூ.10,190-ம் பின்னர் ரூ18,906-ம் 3-வது முறையாக ரூ.85 ஆயிரத்து 700-ம் அனுப்பியுள்ளார்.அதன் பின்னர் அந்த நபர் அமர்தீப்பிடம் அட்வான்ஸ் தொகை கொடுத்தால் அதிக சம்பளம் தருவதாக கூறியுள்ளார்.

இதை நம்பி அமர்த்தீப் 14 தவணைகளில் ரூ.6 லட்சத்து 14 ஆயிரம் அனுப்பி உள்ளார். இதைப் பெற்றுக்கொண்ட அவர் அமர்தீப்புக்கு சம்பளமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 625 மட்டும் கொடுத்தாராம். மீதி தொகையை தராமல் ஏமாற்றி விட்டாராம். இதுகுறித்து அமர்த்தீப் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story