விருதுநகரில் மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி


விருதுநகரில் மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி
x

மூதாட்டியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் பழைய ெரயில்வே காலனியை சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 68). விருதுநகர் அல்லம்பட்டி ஆர்.எஸ். நகரை சேர்ந்த திருப்பதி (42), அவரது மனைவி நல்ல தங்காள் (40) ஆகியோரிடம் அவர்களது வீட்டுமனையை ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கிரையம் பேசி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2022 ஜனவரி வரை பல தவணைகளாக ரூ. 15 லட்சத்து 75 ஆயித்தை திருப்பதியும், நல்லதங்காளும் பெற்றுக் கொண்டனர். ஆனால் வீட்டுமனையை பத்திர பதிவு செய்து கொடுக்க தாமதப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்று அந்த சொத்து பற்றிய விவரத்தை சேகரித்த போது திருப்பதி அந்த சொத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து ரூ. 7லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குருவம்மாள் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் ரூ. 4 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி பணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் பத்திர பதிவு அலுவலகம் சென்ற குருவம்மாளிடம் பணத்தை திருப்பித் தர முடியாது என கூறியதுடன் குருவம்மாளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி குருவம்மாள் விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் திருப்பதி மற்றும் நல்லதங்காள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். ேகார்ட்டு உத்தரவுப்படி திருப்பதி, நல்ல தங்காள் மீது விருதுநகர் மேற்கு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story