தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 7 March 2023 12:15 AM IST (Updated: 7 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

அச்சுறுத்தல் இல்லை

கார்த்தி சிதம்பரம் எம்.பி. காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கட்சி ரீதியாக அடிமையாக செயல்படுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் வலிமையான பலமிக்க அரசியல் கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் அவர்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு நிழலாக செயல்படும் வரை தமிழக மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அது தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

வதந்திக்கு பின்னால் பா.ஜனதா

தமிழக முதல்-அமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி கலந்து கொண்டதை பொறுக்க முடியாமல் அதற்கு மறுநாள் இந்த வதந்திகள் பரவியது கவனிக்கத்தக்க ஒன்றாகும். வதந்திகள் பரவுவதற்கு பின்னால் பா.ஜனதாவினர் இருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆன்லைன் சூதாட்டத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என நிபுணர் குழு அறிக்கை கொடுத்துள்ளது. அதனையொட்டி தமிழக அரசு சட்டம் இயற்றி உள்ளது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆன்லைன் ரம்மியை தடை செய்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே அதனை ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஐ.என்.டி.யு.சி. மணிலா, பொதுச்செயலாளர் களஞ்சியம், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, நகரச்செயலாளர் ரெயில்வே தட்சிணாமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story