16 வயதுக்கு உட்பட்டோருக்கானதூத்துக்குடி கிரிக்கெட் அணி தேர்வு


16 வயதுக்கு உட்பட்டோருக்கானதூத்துக்குடி கிரிக்கெட் அணி தேர்வு
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 6:45 PM GMT)

16 வயதுக்கு உட்பட்டோருக்கான தூத்துக்குடி கிரிக்கெட் அணி தேர்வு வருகிற 9-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு வருகிற 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவகுமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கிரிக்கெட் அணி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட அணி தேர்வு வருகிற 9-ந் தேதி தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அழகர் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் காலை 7 மணிக்கு நடக்கிறது.

விதிமுறைகள்

இந்த வீரர்கள் தேர்வில் பங்கேற்பவர்கள் 16 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (01.09.2007 அன்றோ, அதற்கு பிறகோ பிறந்து இருக்க வேண்டும்). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்பவர்கள் பள்ளிக்கூட அடையா அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். கிரிக்கெட் சீருடை, ஷூ அணிந்து வர வேண்டும். கிரிக்கெட் உபகரணங்கள் கொண்டு வர வேண்டும். தேர்வு செய்யப்படும் வீரர்கள் கண்டிப்பாக பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் கிரிஸ்பினை 80156 21154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story