2-வது நாளாக யானைகள் அட்டகாசம்


2-வது நாளாக யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 21 March 2023 7:00 PM GMT (Updated: 21 March 2023 7:00 PM GMT)

கடையம் அருகே 2-வது நாளாக யானைகள் அட்டகாசம் செய்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ச்சியாக உள்ளது.

நேற்று முன்தினம் தருமபுரம்மடம் ஊராட்சி கடனாநதி அணை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த தென்னை, நெற்பயிரை சேதப்படுத்தி சென்றது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே தோட்டத்தில் ஒரு குட்டி யானை உள்பட 3 காட்டு யானைகள் நுழைந்து நெற்பயிரை சேதப்படுத்தியது.

யானைகள் புகுந்தது தெரிந்தும் அங்கு காவலில் இருந்த கருப்பசாமி என்பவர் யானைகளை டார்ச்லைட் அடித்து விரட்ட முயற்சி செய்தார். ஆனால் யானைகள் கருப்பசாமியை நோக்கி வந்ததால் அவர் பதறி அடித்து ஓடிச் சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் யானைகள் வேறு எங்கும் முகாமிட்டுள்ளதா? எனவும் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.


Next Story