மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு  இழப்பீடு வழங்க வேண்டும்
x

வடகாடு பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

நெற்பயிர்கள் சேதம்

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் அறுவடை பணிகளும் ஒரு சில இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தெற்குப்பட்டி பகுதியில் கடந்த வாரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்தில் பருவம் தவறி சூறாவளி காற்றுடன் கூடிய பெய்த மழையால் நெல், வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் மூலமாக, கணக்கெடுப்பு பணிகள் கூட நடைபெற்று வந்தது. ஆனால் இதுநாள் வரை எந்த விவசாயிக்கும் எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை. விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் மட்டுமே இது போன்ற கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இனிமேலாவது இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறினர்.


Next Story