இல்லாத சுங்கசாவடிக்கு, டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணம் வசூல்


இல்லாத சுங்கசாவடிக்கு,  டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணம் வசூல்
x

இல்லாத சுங்கசாவடிக்கு, டிக்கெட்டுடன் கூடுதல் கட்டணம் வசூல்

தஞ்சாவூர்

தஞ்சை- பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இல்லாத சுங்்்கசாவடிக்கு, டிக் கெட்டுடன் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சுற்றுலா தலம்

தஞ்சை மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட பயணிகள், வெளி மாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பெரிய கோவில், கல்ணை, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன், மனோரா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் சொந்த வாகனங்களில் வருபவர்களை விட பஸ், ரெயில்களில் அதிக அளவில் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை- பட்டுக்கோட்டை

தஞ்சை - பட்டுக்கோட்டை இடையே 50 கிலோமீட்டர் தூரம் ஆகும். இதன் இடையே சூரக்கோட்டை, மடிகை, துறையூர், மேலஉளூர், ஒரத்தநாடு, பாப்பாநாடு என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் பட்டுக்கோட்டை அல்லது தஞ்சைக்கு தான் வர வேண்டும்.

அவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் பஸ் பயணங்களையே நாடுகின்றனர். தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு பஸ் கட்டணம் 36 ரூபாய் ஆகும். ஆனால் 90 சதவீத அரசு பஸ்களில் 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதாவது விபத்து மற்றும் சுங்கவரி என கூடுதலாக ஒன்பது ரூபாய் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் குற்றச்சாட்டு

இது குறித்து பயணிகள் கூறுகையில், தனியார் மற்றும் அரசு பஸ்களில் கட்டணம் வெறும் 36 ரூபாய். ஆனால் கும்பகோணம் கோட்ட அரசு பஸ்களில் விபத்து மற்றும் சுங்கவரி என கூடுதலாக 9 ரூபாய் சேர்த்து ரூ.45 கட்டணம் வாங்குகின்றனர். ஆனால் தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் சுங்கசாவடியே கிடையாது.

குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலேயே சுங்கச்சாவடி கிடையாது. அப்படி இருக்கையில் பயணிகளை ஏமாற்றி இல்லாத சுங்கச்சாவடிக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இந்த வழித்தடத்தில் இது போன்று இல்லாத சுங்கச்சாவடிக்கு கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் புலம்பி தவிக்கிறார்கள். இதனால் பெரிய அளவில் மோசடி நடைபெறுகிறதோ? என எண்ண தோன்றுகிறது. எனவே தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.


Related Tags :
Next Story