மீனவர்களுக்கு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுதல்


மீனவர்களுக்கு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுதல்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆறுதல் செய்தனர்

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பூவரசன்(வயது25), தென்னரசன் (30), ஆறுமுகம் (60), நிவாஸ் (24) மற்றும் சந்திரபாடி மீனவர்கள் அருள்ராஜ் (34) சரத் (32) ஆகிய 6 பேர். கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் இலங்கை எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கையில் கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகின் மீது மோதி அவர்களை தாக்கினர். பின்னர் அவர்களிடம் இருந்து மீன் மற்றும் வலைகளை பறித்து சென்றனர். இதை தொடர்ந்து கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படும் பிரச்சினை குறித்து சட்டசபையில் பேசி தீர்வு காணப்படும் என்றார்.அப்போது அவருடன் அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் கண்ணன், நகர செயலாளர் கிருஷ்ணசாமி, ஊராட்சிமன்ற தலைவர்கள் மோகன், சர்மிளா ராஜ்குமார் அ.தி.மு.க. இளைஞர் செயலாளர் பொற்செழியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மீனவர்கள் உடன் இருந்தனர்.



Next Story