சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:45 AM IST (Updated: 19 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். சத்துணவு கூடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் லதா தலைமை தாங்கினார். மாநில தலைவர் கலா, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கணேசன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நடராஜன், சிங்காரவேலு மற்றும் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story