தீவனம் தட்டுப்பாடு: சீனாபுரம் சந்தையில் கறவை மாடுகள் விலை குறைந்தது


தீவனம் தட்டுப்பாடு: சீனாபுரம் சந்தையில் கறவை மாடுகள் விலை குறைந்தது
x

தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் சீனாபுரம் சந்தையில் கறவை மாடுகள் விலை குறைந்தது.

ஈரோடு

பெருந்துறை

தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் சீனாபுரம் சந்தையில் கறவை மாடுகள் விலை குறைந்தது.

கால்நடை சந்தை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கோவை மாவட்டம் அன்னூர், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன.

விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 120-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 200-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

விலை குறைந்தது

கால்நடை தீவனங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கறவை மாட்டின் விலை குறைந்தது. கடந்த வாரம் ரூ.65 ஆயிரத்துக்கு விற்ற கறவை மாடு நேற்று நடந்த சந்தையில் ரூ.55 ஆயிரத்துக்கு விற்றது. இதேபோல் கடந்த வாரம் ரூ.35 ஆயிரத்துக்கு விலை போன ஜெர்சி மாடு, நேற்று ரூ.27 ஆயிரத்துக்குதான் விற்றது.ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனையான விர்ஜின் கலப்பின கிடாரிக்கன்று நேற்று ரூ.35 ஆயிரத்துக்கு மேல் யாரும் விலை கேட்கவில்லை. நேற்று ரூ.1 கோடிக்கு மாடுகள், கன்றுகள் விற்பனையாகி இருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட வியாபாரிகளும், விவசாயிகளும் மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.


Next Story