பஸ்சில் இருந்து தவறி விழுந்து பூ வியாபாரி பலி


பஸ்சில் இருந்து தவறி விழுந்து பூ வியாபாரி பலி
x

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பூ வியாபாரி பலியானார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பூ வியாபாரி பலியானார்.

வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை அருகே உள்ள துருஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 19). பூ வியாபாரி. வேலூருக்கு சென்ற தனியார் பஸ் வாணியம்பாடிக்கு வந்தபோது பூமூட்டைகளை பஸ்சுக்குள் ஏற்றினார்.

பின்னர் கீழே இறங்கும்போது, பஸ் புறப்பட்டு விட்டது. இதனால் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

இது குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஏகாம்பரம் (வயது 27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story