புனித சந்தியாகப்பர் திருவிழா கொடியேற்றம்


புனித சந்தியாகப்பர் திருவிழா கொடியேற்றம்
x

புனித சந்தியாகப்பர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 480-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு புனித சந்தியாகப்பரின் உருவம் பதித்த கொடியை கொடி மரத்தில் ஏற்றினார். தங்கச்சிமடம் புனித தெரசா ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின், விழா குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், அரியாங்குண்டு கிராம தலைவர் சந்தியா தாஸ், தென் குடாகிராம தலைவர் அந்தோணி சந்தியாகு, பங்குத்தந்தைகள் சேவியர், செபமாலை, சுரேஷ், ராமேசுவரம் முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜூனன், ராமேசுவரம் நகர சபை துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, இந்து சமய பொறுப்பாளர்கள் தவசி, வல்லவ கணேசன், தங்கச்சிமடம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜியாமுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை திருப்பலி பிரார்த்தனை நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந் தேதி இரவு தேர் பவனி நடக்கிறது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தியாகப்பரின் சொரூபம் வைக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வரும்.

இதேபோல் தங்கச்சிமடம் ஜேம்ஸ் நகரில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் திருவிழாவும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சந்தியாகப்பரின் உருவம் பதித்த கொடியை விழுப்புரம் பங்குத்தந்தை மரியடல்லஸ் ஏற்றினார். இதில், ஆலய பங்குத்தந்தை சாமிநாதன், செழியன், விழா கமிட்டியினர் சம்சன், பவுல், அடைக்கலம், அந்தோணி விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசூராஜா சகாயம், எமரிட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24-ந் தேதி இரவு தேர் பவனி நடக்கிறது.


Next Story