மந்தை குளத்தில் மீன்பிடி திருவிழா


மந்தை குளத்தில் மீன்பிடி திருவிழா
x

மந்தை குளத்தில் மீன்பிடி திருவிழா நடை பெற்றது

கரூர்

தோகைமலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மந்தை குளம் உள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக குளம் நிரம்பி வழிந்தது. இதனால் குளத்தில் மீன்கள் வளரத்தொடங்கியது.

தற்போது குளத்தில் தண்ணீர் வற்ற ஆரம்பித்துள்ளதால் மீன்களை பிடிக்க ஊர் முக்கியஸ்தர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு மந்தை குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இதற்கு தோகைமலை நாட்டாண்மைகள் மூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருந்தலூர் அரண்மனை ஜமீன்தார் நாராயணன் வெள்ளை துண்டை விசிறி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில், தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்றாக இணைந்து குளத்தில் இறங்கி அயிரை, முள்ளு கெண்டை, விரால் போன்ற பல்வேறு வகையான மீன்களை போட்டி போட்டு கொண்டு பிடித்து சென்றனர்.


Next Story