பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு


பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு
x

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது.

தொடர் மழை

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி முதல் நேற்று வரை பல்வேறு பகுதியில் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் சிவகாசி, விருதுநகர், வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய தாலுகாவில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால் உற்பத்தியாளர்களும், கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சித்திரை பொங்கல் திருவிழா நடை பெற்று வரும் நிலையில் பண்டிகை கால செலவுக்கு கூட போதிய வருமானம் இன்றி தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

தட்டுப்பாடு?

கடந்த ஒரு வாரமாக போதிய அளவில் பட்டாசு உற்பத்தி செய்யப்படாமல் உள்ள நிலையில் இங்குள்ள பட்டாசு நிறுவனங்கள் வடமாநிலங்களுக்கு இந்த மாதம் அனுப்ப வேண்டிய பட்டாசுகளை அனுப்ப முடியாமல் போகலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் பல மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று தங்களுக்கு தேவையான பட்டாசுகளை மொத்தமாக வாங்க ஆர்டர் கொடுத்தனர். ஆனால் இந்த ஆண்டு அதுபோன்ற மொத்த வியாபாரமும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகள் பட்டாசுகளுக்கு பெரும் அளவில் தட்டுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story