வெள்ளகோவி அருகே நூல் மில்லில் தீ விபத்து - பஞ்சுகள் எரிந்து நாசம்
வெள்ளகோவி அருகே நூல் மில்லில் பற்றிய தீயால் எந்திரம், பஞ்சுகள் எரிந்து சேதம் அடைந்தது.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அரியாண்டிவலசு என்ற இடத்தில் கே.தங்கவேல்(வயது40) என்பவர் நூல் மில் உள்ளது.
இந்த மில்லில் இன்று காலை 9 மணியளவில் பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. உடனே தீ பரவி பஞ்சில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.
உடனே ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் எந்திரம், கட்டிடம், அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சுகள் எரிந்து நாசமாயின.
இந்த தீ விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story