ஆலங்குடி குப்பை கிடங்கில் தீ


ஆலங்குடி குப்பை கிடங்கில் தீ
x

ஆலங்குடி குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது.

புதுக்கோட்டை

ஆலங்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் ஆலங்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள அம்புலி ஆறு அருகில் புதுக்கோட்டைவிடுதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.


Related Tags :
Next Story