தீத்தடுப்பு ஒத்திகை


தீத்தடுப்பு ஒத்திகை
x

நாகை அரசு கல்லூரியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுஜரித்தா மாக்டலின் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அஜிதா, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் ஹாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆய்வாளர்கள் மொக்கிசன், தியாகராஜன் தலைமையிலான குழுவினர் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் மூலம் ஏற்படும் தீயினை எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.


Next Story