தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் ஒத்திகை


தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் ஒத்திகை
x

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் முன்னிலை வகித்தார். இதில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், அதிக அளவில் வெள்ளத்தில் சிக்கும்போது பொதுமக்கள் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும், அந்த இடத்தில் இருந்து விரைந்து வெளியேறுவதற்கு ஏதுவாகவும் அவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் மீட்பு பணி குழுவினர் ஏரியில் மூழ்கியவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டு வருவது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது போன்றவை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story