தீ தொண்டு நாள் நிகழ்ச்சி


தீ தொண்டு நாள் நிகழ்ச்சி
x

திருவாரூர் மாவட்டத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது.

தீ தொண்டு நாள்

தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் ச.வடிவேலு மற்றும் மாவட்ட உதவி அலுவலர் ம.இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தீ தொண்டு நாளை முன்னிட்டு ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பிரசாரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கூத்தாநல்லூர்

1944-ம் ஆண்டு, மும்பையில் எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பல் தீப்பற்றி எரிந்த போது, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 66 பேர் தீயில் சிக்கி இறந்தனர். அதை அனுசரிக்கும் வகையில், நேற்று கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில், உயிர் நீத்த தீயணைப்பு வீரர்கள் நினைவை அனுசரித்து, மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தி தீயணைப்பு வீரர்கள் மரியாதை செலுத்தினர்.


Next Story