மழையால், தீ விபத்தில்லா தீபாவளி

மழையால், தீ விபத்தில்லா தீபாவளி
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தினத்தில் பரவலாக மழை பெய்ததால் பட்டாசு வெடித்து தீ விபத்து சம்பவங்கள் நடைபெறாமல் விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடப்பட்டுள்ளது என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்

உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீப ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகையையொட்டி தீவிபத்து ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு நிலையம் 24 மணி நேர பணியில் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு படையினர் அனைத்து பணியாளர்களுடன் முழுநேர பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி எந்தவிதமான தீவிபத்து சம்பவங்களும் நடைபெறவில்லை. குறிப்பாக நேற்று முன்தினம் தீபாவளி அன்று அனைத்து பகுதிகளிலும் பரவலாக சாரல் மழைபெய்ததால் தீவிபத்துகள் எதுவும் நடைபெறவில்லை.

விழிப்புணர்வு

மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததன் காரணமாகவும் மக்களிடம் பட்டாசு வெடிப்பதன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும் தீவிபத்து சம்பவங்கள் நடைபெறவில்லை என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story