நாமக்கல்லில் பரிசு சீட்டு குலுக்கல் நடத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

நாமக்கல்லில் பரிசு சீட்டு குலுக்கல் நடத்திய  சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம்  நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

நாமக்கல்லில் பரிசு சீட்டு குலுக்கல் நடத்தி நேர்மையற்ற வணிக முறையை கையாண்ட தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்

நாமக்கல்லில் பரிசு சீட்டு குலுக்கல் நடத்தி நேர்மையற்ற வணிக முறையை கையாண்ட தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குலுக்கல் பரிசு சீட்டு

நாமக்கல் நகரில் விற்பனையை பெருக்குவதற்காக தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று கடந்த 2014-ம் ஆண்டு பரிசு சீட்டு குலுக்கல் நடத்தியது. இதற்கு எதிராக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கம் சார்பில் நுகர்வோர் தரப்பில் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நுகர்வோர் கோர்ட்டு, நேர்மையற்ற வணிக முறையை கையாண்ட சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வழக்கு தொடுத்த நபருக்கு ரூ.5 ஆயிரம், மன உளைச்சல் இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்கவும், தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.65 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு உள்ளது. மேலும் இனிமேல் இதுபோன்ற குலுக்கல் பரிசு சீட்டு விற்பனையை தொடராமல் இருக்க நிரந்தர தடையாணை விதிக்கப்பட்டு உள்ளது.

கடைக்காரருக்கு அபராதம்

இதேபோல் பிரெட் பொட்டலத்தில் எவ்வித லேபிள் விவரங்களும் இல்லாமல் வெறும் வெள்ளை பாலிதீன் தாளில் சுற்றி விற்கப்பட்டதை எதிர்த்தும், கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிரட் பொட்டலத்தின் விலையான ரூ.25-ஐ நுகர்வோருக்கு திருப்பி கொடுக்கவும், மன உளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.2 ஆயிரம் வழங்கவும், தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Next Story