மாணவ-மாணவிகளுக்கு மாநில கல்வி சாதனை குறித்த கள பயிற்சி


மாணவ-மாணவிகளுக்கு மாநில கல்வி சாதனை குறித்த கள பயிற்சி
x
தினத்தந்தி 21 Oct 2023 6:45 PM GMT (Updated: 21 Oct 2023 6:46 PM GMT)

கழுகுமலை அருகே வளனார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு மாநில கல்வி சாதனை குறித்த கள பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மாநில கல்வி சாதனை குறித்த கள ஆய்வர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காசிராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் அருட்தந்தை ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். பேராசிரியர் அய்யனக்குமார் வரவேற்றார். தொடர்ந்து கல்லூரியைசேர்ந்த 59 மாணவ-மாணவிகள் மற்றும் வாசுதேவநல்லூர் வியாசா மகளிர் கல்லூரியை சேர்ந்த 88 மாணவிகளும் பயிற்சியில் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த முதுநிலை விரிவுரையாளர் சாந்தி டேவிட், மாரியப்பன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் வியாசா மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முத்துலட்சுமி, கல்லூரி நூலகர் ஆவுடையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் அருட்தந்தை ஜோசப் கென்னடி மற்றும் பேராசிரியர்கள் மணிகண்டன், பிரபாகரன், கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story