விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து களப்பயிற்சி


விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து களப்பயிற்சி
x

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து களப்பயிற்சி திருக்கழுக்குன்றத்தில் 24-ந் தேதி நடக்கிறது

வேலூர்

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் சிறப்பு களப்பயிற்சி வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக இந்தாண்டு தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நடப்பட உள்ளது. இதற்காக மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 274 விவசாயிகளுக்கு 5 லட்சம் மரக்கன்றுகள் வரை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வளர்ப்பது தொடர்பாக வருகிற 24-ந் தேதி களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பழம், மரங்கள் வளர்த்து வரும் விவசாயிகள், மரஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானிகள், செம்மர வளர்ப்பு, மிளகு சாகுபடி குறித்து முன்னோடி விவசாயிகள் பேச உள்ளனர். இதில், விவசாயிகள் பங்கேற்று பயன்பெற முடியும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வேலூர் மாவட்ட ஈஷா தன்னார்வலர்கள் மணிவண்ணன், சதீஷ், முன்னோடி விவசாயிகள் காட்பாடி சுஜாதா, குடியாத்தம் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story