தூய ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா


தூய ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா
x

சிவகாசி ரிசர்வ் லைன் தூய ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி ரிசர்வ் லைன் தூய ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆரோக்கிய அன்னை

சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 22-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அதன் பின்னர் கொடி பவனி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். விழாவில் கொடி மரத்தில் விருதுநகர் மறை வட்ட அதிபர் அருட்பணி அருள்ராயன் அடிகளார் கொடியேற்றினார். இதை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது.

தேர்பவனி

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை அருட்பணி அற்புதசாமி செய்திருந்தார்.

வருகிற 4-ந்தேதி மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி திருப்பலி நடத்துகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவினை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


Next Story