மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி


மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி
x

மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கத்தில் நேற்று தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம், அகில இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சங்கம் சார்பில் நர்சிங் மாணவ, மாணவிகளுக்கான வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழும பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி சிறப்புரை ஆற்றினார். இதில் அகில இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகளின் சங்க தலைவர் விவேகானந்தன், ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், செயலாளர் குணசிங், அன்னை மகளிர் கல்லூரி தாளாளர் மலையப்பசாமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை திறந்து வைத்தும், கரூர் கண்மணிகள் என்ற தலைப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினையும் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உடனிருந்தார்.

பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டித்தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு "படிப்பது சுகமே" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.


Next Story