குறிஞ்சிப்பாடி அருகேடாஸ்மாக் கடையை மூடாவிட்டால் உண்ணாவிரதம்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குறிஞ்சிப்பாடி அருகேடாஸ்மாக் கடையை மூடாவிட்டால் உண்ணாவிரதம்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 16 Aug 2023 6:45 PM GMT (Updated: 16 Aug 2023 6:45 PM GMT)

குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கடலூர்



குறிஞ்சிப்பாடி அருகே அன்னதானம்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பள்ளி, கல்லூரிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். விவசாய வேலை உள்ளிட்ட பிற வேலைகளுக்கும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள்.

இதற்கிடையில் நாங்கள் வசிக்கும் மெயின்ரோட்டில் மாவட்ட நிர்வாகம் மூலம் டாஸ்மாக் கடை வைத்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். அதன்பிறகு அந்த கடையை மூடி விட்டார்கள். இப்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதை அறிந்த நாங்கள் இது பற்றி தங்களிடம் நேரில் வந்து மனு அளித்து, அந்த கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்ணாவிரதம்

இந்நிலையில் இன்று (அதாவது நேற்று) மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இதை பார்த்த நாங்கள் அதை தடுத்தோம். மீறி அவர்கள் வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story