கறம்பக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கறம்பக்குடி:
மத்திய அரசின் சார்பில் மின்சார சட்ட திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா விவசாயிகள் மற்றும் நெசவாளர்களை பாதிக்கும் என கூறி விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்புக்கோவில் முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலசுந்தரமூர்த்தி, ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி மற்றும் விவசாய சங்கதினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கறம்பக்குடி மின்வாரிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.