என்.எல்.சி.யை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


என்.எல்.சி.யை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x

செய்யாறில் என்.எல்.சி.யை கண்டித்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார், செய்யாறு தாசில்தார் முரளி முன்னிலை வகித்தார்.

இதில் செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற அறிவுறுத்தினார்.

முன்னதாக குறைதீர்வு கூட்டத்திற்கு கலந்து கொள்ள கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வாழ்குடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் என்.எல்.சி.யை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கழுத்தில் என்.எல்.சி. என்ற விளம்பர பதாகையை தொங்கவிட்டபடி நெல் பயிரினை அழித்துவிட்டு என்னதான் நீங்கள் சாப்பிட போகிறீர்கள் என கேள்வி கேட்கும் விதமாக சிலர் மாடுகள் வேடமிட்டு அரிசி தவிடு கலந்து வைத்த தண்ணீரினை மாடுகள் போல மண்டியிட்டு குடித்தும், அகத்திக்கீரை தழையை மேய்ந்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெருங்களத்தூர் ரகுபதி, சிறுங்கட்டூர் முருகன், ஏனாதவாடி கஜேந்திரன், பில்லாந்தி தட்சணாமூர்த்தி அகத்தேரிப்பட்டு கிருஷ்ணன், கீழ்புதுப்பாக்கம் முனிரத்தினம், திரும்பூண்டி ரகுபதி, மாளிகைப்பட்டு ராஜ் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.


Related Tags :
Next Story