விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) திருமால் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

இதில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக கலசபாக்கம் பகுதியில் தான் அதிகளவு நெல் விளைச்சல் உள்ளது.

ஆனால் இங்கு 2 அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மட்டுமே செயல்படுகிறது. 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 மட்டுமே செயல்பட்டால் விவசாயிகள் எப்படி முழுமையாக பயன்பெறுவார்கள்.

அரசுக்கு சொந்தமான ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடம் கட்டி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், இதுபோன்ற கூட்டங்கள் வாயிலாக புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 மாதத்திற்கு ஒருமுறை தலைமை தாங்கி நடத்தும் அதிகாரிகள் மாறிக்கொண்டே வருகிறீர்கள்.

நாங்கள் கூறிய பிரச்சினைகளை கேட்டால் எப்போது சொன்னீர்கள், ஏன் இன்னும் தீர்க்கவில்லை என்று பதில் கேள்வி கேட்கிறீர்கள் இப்படி இருந்தால் எப்படி எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பின்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வலியுறுத்தி ஏர் உழுவது போன்று கலப்பை ஏற்பாடு செய்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story