சிப்காட் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


சிப்காட் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x

சிப்காட் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு அருகே சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய நிலம், வீடுகள் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்ட நிலையில் வேளாண் நிலங்களில் உள்ள பாசன கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகை வழங்கும் வரை விவசாயம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சிப்காட் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சிப்காட் திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இழப்பீடு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து குடும்பத்தினருடன் போராட்டம் நடத்துவோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story