விவசாயிகள் மாட்டு வண்டி ஊர்வலம்


விவசாயிகள் மாட்டு வண்டி ஊர்வலம்
x
தினத்தந்தி 31 Aug 2023 7:30 PM GMT (Updated: 31 Aug 2023 7:30 PM GMT)

விவசாயிகள் மாட்டு வண்டி ஊர்வலம்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், கொப்பரை தேங்காயை கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக உள்ளூர் தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டும், உரித்த தேங்காயை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், கள் இறக்கி விற்பனை செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தேங்காய் உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் சுல்தான்பேட்டையில் இருந்து செஞ்சேரிமலை வரை மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், பூராண்டாம்பாளையம் மணி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story