மானியத்தில் உளுந்து, தென்னங்கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


மானியத்தில் உளுந்து, தென்னங்கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

மானியத்தில் உளுந்து, தென்னங்கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, கங்கரகோட்டை, இனாம்ரெட்டியபட்டி ஆகிய ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதே சமயத்தில் இக்கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகள் மற்றும் குடும்பங்களுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பாக பல்வேறு இடுபொருட்கள் வழங்க உள்ளனர். வேளாண் துறை சார்பாக 100 சதவீத மானியத்தில் 200 குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள், 75 சதவீத மானியத்தில் வரப்பு பயிர் சாகுபடிக்கு ஒரு எக்டேருக்கு 5 கிலோ உளுந்து வீதம் 15 விவசாயிகளுக்கும், கிராமத்திற்கு 5 விசைத்தெளிப்பான், 50 சதவீத மானியத்திலும் 5 கைத்தெளிப்பான், ரூ.750 மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பயனாளிகள் பட்டியல் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது வேளாண்மைத்துறை மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் யாரேனும் விடுபட்டிருந்தால் உடனடியாக வெம்பக்கோட்டை வேளாண்மைத்துறையை அணுகலாம். மேற்கண்ட தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு கூறினார்.


Next Story