விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாட்டில் 2022-23-ம் ஆண்டில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் இயற்கை விவசாயிகளை தேர்வு செய்து, மாநில அளவில் விருதுகள் வழக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளை தேர்வு செய்து மாநில அளவில் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண்மையை திறம்பட செயல்படுத்தி கொண்டிருக்கும் விவசாயிகள், 'வேலிடிட்டி ஸ்கோப்' சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆகும். மாவட்ட அளவிலான தேர்வு குழுவில் பங்கேற்கும் விவசாயிகள், தமது சாதனையை நியாயமான முறையில் விளக்கிட வேண்டும். மாநில அளவில் பரிந்துரைக்கப்பட்டு, தேர்வு பெறும் பங்கேற்பாளருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.60 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், தங்களது விவரத்தை உழவர் செயலியில் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு கட்டணமாக ரூ.100-ஐ செலுத்தி பங்கேற்பிற்கான விண்ணப்பப்படிவத்தை (இணைப்பு -11) பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை பெரம்பலூர் தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story