பாடை கட்டி ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்


பாடை கட்டி ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்
x

பாடை கட்டி ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் வெண்டைக்காய்க்கு உரிய விலை கொடுக்க வலியுறுத்தி ரோட்டில் வெண்டைக்காய்களை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் 40-வது நாளான நேற்று நடந்த போராட்டத்தில், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயி இறந்தது போலவும், அவரை பாடையில் படுக்க வைத்து ஓயாமரி சுடுகாட்டுக்கு தூக்கி செல்லும் போராட்டம் நடத்தினர்.

அப்போது, விவசாயிகள் கை, கால், தலையில் கட்டு போட்டு ஒப்பாரி வைத்தபடி சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போக செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story