உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்


உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்
x

உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்

தஞ்சாவூர்

வல்லம்

டெல்டாவில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும், கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. இந்தாண்டு மேட்டூர் அணை முன்னதாக மே மாதத்திலேயே திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நடப்பாண்டில் இலக்கை தாண்டி நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் வல்லம், ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம் உள்பட பல பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் கதிர் வந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்தநிலையில் தஞ்சை அருகே 8 கரம்பை பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடிக்காக வயல்களில் உழவு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு புறம் குறுவை பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. மறுபுறம் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story