மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

வேலூர்

வேலூர் அருகே உள்ள பாலமதி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 41) விவசாயி. இவர் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு மோட்டார்சைக்கிளில் பூ கொண்டு வந்தார். அவருடன் உறவினர் நவீன்குமார் (17) என்பவரும் வந்தார். இருவரும் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள கடையில் பூக்களை கொடுத்துவிட்டு பின்னர் பாலமதி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேலூர்-ஆரணி சாலையில் சாய்நாதபுரத்தில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கருணாமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த கருணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நவீன்குமார் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கருணாமூர்த்தி உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story