2021-22-ம் நிதியாண்டில் ரூ.57 ஆயிரம் கோடி கடல்சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி


2021-22-ம் நிதியாண்டில் ரூ.57 ஆயிரம் கோடி கடல்சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி
x

2021-22-ம் நிதியாண்டில் ரூ.57 ஆயிரம் கோடி கடல்சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி நடந்துள்ளதாக வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

மத்திய அரசின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2021-22-ம் நிதியாண்டில் 57 ஆயிரத்து 586 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 லட்சத்து 69 ஆயிரத்து 264 மெட்ரிக் டன் கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது, மத்திய அரசின் வர்த்தகத்துறை வழங்கிய ஏற்றுமதி இலக்கில் 99.4 சதவீதம் ஆகும்.

2021-22-ம் நிதியாண்டில் பதப்படுத்தப்பட்ட இறால் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது, 42 ஆயிரத்து 706 கோடி ரூபாய்க்கு இறால் ஏற்றுமதி நடந்துள்ளது.

இது மொத்த வருவாயில் 75 சதவீதம் ஆகும். இதேபோன்று 3 ஆயிரத்து 471 கோடி ரூபாய்க்கு பதப்படுத்தப்பட்ட மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story