உயர்தர உள்ளூர் பயிர் ரகங்ளை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி


உயர்தர உள்ளூர் பயிர் ரகங்ளை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி
x

திருவண்ணாமலை அருகே உள்ள அத்தியந்தலில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்ளை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உள்ள அத்தியந்தலில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்ளை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அருகில் உள்ள அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி நடைபெற்றது. வேளாண்மை, உழவர் நலத்துறை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை இணைநங்த நடத்திய கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) கோ.சரவணன் வரவேற்றார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் அரகுமார், கண்காட்சியின் முக்கியத்தும் மற்றும் உள்ளூர் பயிர் ரகங்கள் சாகுபடியின் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அத்தியந்தல் சிறுதானிய மகத்துவமைய தலைவர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு சிறுதானிய ஆண்டு 2023 மற்றும் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன், பாரம்பரிய பயிர் சாகுபடியில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். வேளாண்மை துணை இயக்குனர்கள் கண்ணகி, ஏழுமலை, அசோக்குமார், உமாபதி, தாமஸ் மற்றும் செயற்பொறியாளர் பஞ்சாபகேசன் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்தரைத்தனர்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், கலைநிகழ்ச்சி, பாரம்பரிய சிறுதானிய உணவுப்போட்டி நடைபெற்றது. முடிவில் வேளாண்மை உதவி இயக்குநர் ராம்பிரபு நன்றி கூறினார்.


Next Story