துணை தேர்வு எழுத அனுமதி


துணை தேர்வு எழுத அனுமதி
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:46 PM GMT)

தொழில்பயிற்சி நிலையத்தில் 2014 முதல் படித்தவர்கள் துணை தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2014 முதல் 2017 வரை சேர்க்கை செய்யப்பட்ட பருவமுறை பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வு எழுத (1+4) 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு அரியவாய்ப்பும் 2018 முதல் 2021 வரை சேர்க்கை செய்யப்பட்ட ஆண்டு முறை பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வு எழுத கூடுதலாக ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இத்துணைத்தேர்வுகள் வருகிற 25-ந் தேதி முதல் நடைபெறவுள்ளது. எனவே, அகில இந்திய தொழிற் தேர்வில் கருத்தியல் பணிமனை கணித அறிவியல் வேலைவாய்ப்புத்திறன் ஆகிய பாடங்களில் தோல்வியுற்ற பயிற்சியாளர்கள் கணிணி முறையில் நடைபெறும் துணைத்தேர்வு எழுத வருகிற 10-ந் தேதிக்குள் அரசு தொழிற் பயிற்சி நிலையம், முத்துப்பட்டி, சிவகங்கைக்கு நேரில் வந்து தேர்வு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மேலும், அகில இந்திய துணை தொழிற்தேர்வு தொடா்பான விவரங்களை உடனுக்குடன் பெற http://skilltraining.tn.gov.in மற்றும் http://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story