எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தைகிராம மக்கள் முற்றுகை


எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தைகிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள நாவலக்கம்பட்டி பகுதியில் தனியார் சோலார் நிறுவனம் ஒன்று மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பாதையை ஆக்கிரமித்து உள்ளதாகவும,் இதனால் அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு அப்பகுதி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் கிருஷ்ணகுமாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்


Next Story