கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
x

கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல்-அமைச்சராக பதவியேற்று 2-வது முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார். இதையொட்டி ஈரோட்டில் இருந்து கார் மூலம் கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நொய்யல் குறுக்குச்சாலை, கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

முதல்-அமைச்சர் வருகையொட்டி சாலைகளின் இருபுறங்களில் ஏராளமான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து கரூர் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார். அதன்பின்னர் அரவக்குறிச்சி தடாகோவிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முன்னதாக காலை 8.30 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கரூர் அரசு விருந்தினர் மாளிகையிலும், தடாகோவிலிலும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.


Next Story