டாஸ்மாக் பணியாளர் சங்க மாநாடு


டாஸ்மாக் பணியாளர் சங்க மாநாடு
x

நாகையில் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநாடு நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு நாகை அரசு பணியாளர் சங்கத்தில் நடந்தது. மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமன், பொருளாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 18 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரமும், குறைந்தபட்ச ஓய்வூதியாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் நாகையில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் பணியாளர் சங்க மாநில தலைவர் மகேந்திரன்,அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story