ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்பு


ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு பட்டப்படிப்புடன் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பிலானி கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலை்ககழகத்தில் பி.சி.ஏ. பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக்கழகத்தில் இன்டர்கிரேட்டட் மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு படித்திடவும் வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் 2022-ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம், 2023-ம் ஆண்டுகளில் முடித்தவா்கள் 75 சதவீதம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


Next Story