மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு


மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பணி நியமனம் செய்ய அரசு ஆணை

மாநில நலவாழ்வு குழுமத்தின் கீழ் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகர்புற மருத்துவ நிலையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர் நிலை-2 மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிகமாக பணி நியமனம் செய்ய அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நகர்புற மருத்துவ நிலையங்கள் மருத்துவ அலுவலர்-1, சுகாதார ஆய்வாளர்-1 மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர் பதவிகளுக்கு ஓப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 19.2.2023 மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

மருத்துவமனை பணியாளர் பணி

மருத்துவ அலுவலர் பணிக்கு, 40 வயதுக்கு உள்பட்டவராகவும், இளங்கலை மருத்துவ படிப்பு முடித்து தமிழ்நாடு மருத்துவ குழுமத்தில் பதிவு செய்தவராகவும் இருக்கவேண்டும். சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணிக்கு, 10-ம் வகுப்பில் தமிழ் மொழியை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்து, 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர்

கல்வித்தகுதி பெற்ற 50 வயதுக்கு உட்பட்டவராகவும், மருத்துவமனை பணியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு படித்த 50 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

வருகிற 19-ந்தேதிக்குள்

ஊதிய விவரம் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய விண்ணப்ப படிவத்தை https://www.mayiladuthurai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ 19.2.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பத்தை துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம், 5-ம் நம்பர் புதுத்தெரு, நல்லத்துக்குடி ரோடு, மயிலாடுதுறை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story