வேலைவாய்ப்பு முகாம்


வேலைவாய்ப்பு முகாம்
x

திருப்பத்தூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்துர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. முகாமில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ., செவிலியர், மருந்தாளுனர், பொறியியல் படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

எனவே மேற்காணும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story