கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
பாலக்கோடு அருகே முதலிப்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
தர்மபுரி
பாலக்கோடு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முதலிப்பட்டி கிராமத்தில் உணவு, தண்ணீர் தேடி 3 காட்டு யானைகள், நஞ்சப்பன் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தன. இந்த யானைகள் கரும்பு பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன. இதுகுறித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து யானைகளை அண்ணாமலை காப்புக்காட்டுக்கு விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story